Sunday, October 18, 2020

Learning Hindi

சுந்தர்பிச்சை ஆங்கிலம் மட்டும் கற்றுக்கொண்டு இன்று கூகுள் தலைவராக வரவில்லையாஎனவே இந்தி படிக்க வேண்டாம் ஆங்கிலம் படித்தால் போதும் என்பதற்கான ஒரு உதாரணம்சுந்தர்பிச்சைஅவருக்கு இந்தி     தெரியாது என்று இந்தியை புறக்கணிக்க ஒரு நியாயமாக எதிர் தரப்பு எடுத்து வைக்கிறது

நாங்கள் மற்ற மாநிலங்கள் போனால் இந்தி அங்கு போய்  கற்றுக்கொள்கிறோம்நாங்கள் ஏன் பள்ளியில் இந்திகற்றுக்கொள்ள வேண்டும் என்றுஎன்று இந்தி படிக்க வேண்டாம் என்பதற்கான ஒரு காரணமாக     எதிர்தரப்பு எடுத்து வைக்கிறது


சுந்தர் பிச்சை நியாயம் ஒரு பார்வை


சுந்தர் பிச்சை என்பது ஒரு rare Phenomena அதை generalise பண்ண முடியாதுஎத்தனை சதவீதம் பேர்   அமெரிக்கா போன்ற வெளிநாடு செல்கிறார்கள்எத்தனை சதவீதம் பேர் Gulf செல்கிறார்கள்எத்தனைசதவீதம் பேர் தமிழகம் தாண்டி மற்ற    மாநிலம் செல்கிறார்கள்ஏறக்குறைய 98% இந்திய கம்பேனியின் அல்லது MNC கம்பேனியின் Headquarters டெல்லியிலோஅல்லது மும்பயிலோதான்     இருக்கும்எனக்கு தெரிந்து Gulf   (அங்கும் இந்தி தெரிந்தால்     சமாளித்து கொள்ளலாம்), மற்ற மாநிலத்திற்கு படிக்கவேலைபார்க்கசெல்பவர்கள்அல்லது தங்கள் தலைமையகத்திற்கு செல்பவர்கள்     சதவீதம் அமெரிக்கா செல்பவர்களின்சதவீதத்தை விட மிக அதிகம்    எனவே சதவீத அடிப்படையில் இந்தி முக்கியத்துவம் பெறுகிறது


பள்ளியில் நான் ஏன் இந்தி படிக்க வேண்டும்வேலை நிமித்தமாக எந்த மாநிலம் சென்றாலும் அங்கு நான் இந்திகற்றுக்கொள்வேன்ஒரு பார்வை


ஒருவர் தமிழகத்தில் தன் தொழிலை ஆரம்பித்து இந்தியா முழுதும் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தவேண்டுமானால் இந்தி அவசியம்ஒருவர் தமிழக மாநிலத்தை தாண்டினாலே அவருக்கு தொடர்பு மொழி    இந்திதான்60 ஆண்டு கால தமிழக திராவிட அரசியல் நம்மை    உண்மை உணர விடாமல் செய்கிறது அல்லது உண்மைதெரிந்தும் அதைமறைக்க அல்லது மறுக்க வைக்கிறது என்பது ஒரு துரதிருஷ்டம்


யார் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இந்தி என்பது    இந்தியாவின் தொடர்பு மொழிஇதுஎந்த சட்ட நிர்பந்தமும்    இல்லாமலேயே பெரும்பாலான மாநிலங்களில் பரவலாக இயல்பாக    பேசப்படும் ஒரு மொழி இந்தி


இந்திய பொருளாதார சந்தை 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்தமிழ்நாட்டின் பொருளாதார சந்தை 290 பில்லியன் டாலர்கள்இங்கு உள்   நாட்டிலேயே இவ்வளவு பெரிய சந்தை இருக்கும் பொழுதுதமிழர்கள்    தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள இந்தி கற்றுக்கொள்வது என்பதுதவிர்க்க முடியாத ஒன்றுபுத்திசாலித்தனமான ஒன்றும் கூட


இன்று நேற்றல்ல பல கம்பேனிகளின் தலைமையகம் அது இந்திய    கம்பேனியாக இருந்தாலும் அல்லது Japanese MNC, அல்லது American MNC அல்லது KoreanMNC அல்லது Chinese MNC ஆனாலும் அது டெல்லி   அல்லதுமும்பாயில் தான் பெரும்பாலும் உள்ளது அங்கு சதவீத    அடிப்படையில் மற்ற மாநிலகாரன் தான் அதிகம்அங்கு இந்தியை தன் தாய்மொழியாக கொள்ளாத பஞ்சாபிகுஜராத்திராஜஸ்தானி   வங்காளிபீகாரிஒடிசாகன்னடர்தெலுங்கர்காஷ்மீரிமராட்டியர்    மற்றும் கேரளர் ஆகியோர் வேலை செய்வார்கள்இவர்கள்எல்லோரின் தாய்மொழியும் இந்தி அல்ல ஆனால் மேற்சொன்ன அனைத்து இந்தி    அல்லாத   மாநிலத்தவர்களும் சரளமாக இந்தி பேசுவார்கள்அவர்கள்    அங்குவந்து தான் இந்தி கற்றுக்கொண்டார்களாஇல்லை பள்ளிகளில்    இந்தி படித்து வந்தவர்கள்அதனால் அவர்கள் தாய் மொழி அழிந்து விட்டதாஅல்லது மூன்றாவது ஒரு மொழிகற்றதால் அதிக சுமை சுமந்தார்களா


எனது தற்போதைய American MNC பாஸ் (Indian Head) ஒடிசாவை     சே்ந்தவர்முன்பு வேலை செய்த கம்பேனி Japanese MNCயில் என் பாஸ் முன்பு (IndianHead) ஒரு வங்காளி, பிறகு வந்தவர்    ஒடிசாவை சேரந்தவர்அதற்குமுன்னால் வேலை செய்த Japanese MNC யில் எனது பாஸ் ( Indian Head) முதலில் ஒரு இந்தி சரளமாக பேச 

தெரிந்த தமிழர்பின்பு வந்த Indian head ஒரு பஞ்சாபி இங்கு சொன்ன அத்தனை பேருக்கும் தாய் மொழி  இந்தி அல்ல. Head officeல் meeting 

நடக்கும் பொழுது பலமுறை ஆங்கிலத்தில் இருந்து இயல்பாக இந்திக்கு   conversation சென்று விடும்தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தை    சார்ந்த யாரும் புரியாமல் நெளியமாட்டார்கள்


அவ்வளவு தூரம் செல்வானேன்அருகில் இருக்கும் கேரளா   மலையாளிகள் எல்லோரும் இந்தி பேசுவார்கள்படித்தவர்கள்    ஆங்கிலமும் இந்தியும் பேசுவார்கள்தாய் மொழி அழிந்து விடும் என்று இந்தியை எதிர்கும் தமிழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள்ஒரு    திருமணத்திற்கு போனால் பேண்ட் சட்டைதான் உடுத்திக்கொண்டு    போவார்கள்ஆனால் நாம் மலையாளிகளை கவனித்திருக்கலாம்   மலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் கட்டாயம்    மலையாளத்தில் தான்உரையாடுவார்கள்ஆங்கிலம் பயன்படுத்தவே    மாட்டார்கள்ஒரு திருமணத்திற்கு போனால் வேஷ்டி சட்டையில்தான் போவார்கள் (அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாலும் கூட).    கேரளாவில் மொழி அழிந்துவிட்டதாஅல்லது பண்பாடு அழிந்து    விட்டதாஇரண்டையும் தமிழர்களை விட அவர்கள் நன்றாகவே    இந்தியையும் கற்றுக்கொண்டு இது நாள் வரை காத்து வந்து    கொண்டிருக்கிறார்கள்என்ன அங்கே கெட்டுவிட்டது


இங்கு பெரும்பாலான தமிழர்கள் திராவிட ஊழல்வாதிகளின் பேச்சை கேட்டு தமிழை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு இந்தி படிக்காமல் இருந்து விட்டு இன்று தமிழில் எழுத தெரியாமல் இருக்கிறார்கள்அப்படிஎழுதினாலும் அவ்வளவு எழுத்து பிழைதமிழை திராவிடம் காத்த    லட்சணம் இதுதான்


இறுதியாகசதவீத அடிப்படையில் சுந்தர்பிச்சைகளை காட்டிலும் வெளிமாநிலம் சென்று வேலை செய்பவர்கள்மிக அதிகம்வேலை    வாய்ப்புகளும்தொழில் வாய்ப்புகளும் இந்தியாவில் மிக மிக அதிகம்


இந்தி கற்றுக்கொள்வதனால் தமிழ் அழியாது தாய்மொழியாக இந்தி    இல்லாத மேற்சொன்ன அத்தனை மாநிலங்களும் சாட்சிஇந்திக்காரன் நம்மை ஆள நாம் இந்தி படிக்க வேண்டுமா என்ற கேள்வியும் அடிபட்டுபோகும் ஏனென்றால் பல MNC பாஸ்களும் இந்திய கம்பேனி பாஸ்களும் பெரும்பாலும் இந்தியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள்இந்தி பேச தெரிந்தவர்கள்.  


மேற்சொன்ன இந்தி தாய்மொழியாக கொள்ளாத எல்லா மாநிலங்களின் மாணவர்களும் மூன்றாவது மொழியாகஇந்தியை கற்கிறார்கள் Majority of them. 


மற்ற மாநிலங்களின் குழந்தைகள் மூன்றாவது மொழியை    கற்றுக்கொள்ளும் பொழுது தமிழ் குழந்தைகள்மூன்றாவது மொழியை    கற்பதில் என்ன சிரமம்


முடிக்கும் முன்இந்தி மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்வது நம்   மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களோடு சரி சமமாக உள் நாட்டு தொழில் மற்றும் வேலை வாய்பை கொடுக்கும் விஷயம் என்பது    நடைமுறை நிதர்சனம்

ஆனால் புதிய கல்வி கொள்கையோ அல்லது மத்திய அரசாங்கமோ    இந்தியை தான் மூன்றாவது மொழியாககற்க வேண்டும் என்று    சொல்லவில்லைதிணிக்கவும் இல்லைஎனவே எங்கிருந்து இங்கு இந்தி திணிப்பு வந்ததுஎனவே சாதக பாதகங்களை சீர் தூக்கி பார்த்தால்    மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொள்வது தமிழக    மாணவர்களுக்கு அதிக பலன் தரும்