Sunday, February 27, 2011

GOD GIFTED CREATIVITY - A VIEW

Any creativity அது இசையாக இருக்கட்டும் அல்லது எழுத்தாக இருக்கட்டும், பல பேர்களின் உணர்வை அசைக்க முடிகிறதென்றால் அது நிச்சியமாக மனதின் விளைவாக இருக்க சாத்தியமில்லை.

Creator மனதில் ஒரு களமோ அல்லது Situation - னோ அதை எழுதவேண்டும் அல்லது இசை அமைக்க வேண்டும் என்ற உணர்வு தீவிரம் அடையும் பொழுது மனதில் ஒன்றும் இல்லாமல் ஆகி ஒரு வெற்றிடம் உருவாகி விடுகிறது (It is certainly not a blank paper state, it has some.... If said as outline, it will give a wrong meaning but it does have a unfilled shape with no words or music pre-filled) பின்பு அவர்களை கருவியாக்கி ஒரு ஆக்கம் பீறிட்டு எழுந்து அந்த வெற்றிடத்தை மிச்சமில்லாமல் நிறைக்கிறது.

அது நிறைக்கும் வேகம், துல்லியம் (fraction of seconds கணக்கில்) மனதை
கொண்டு அறிய முடியாதது, அதற்கு ஆட்படுபவர்களுக்கே அது ஒரு அதிசய நிகழ்வு!
எனவேதான் இதை நன்கு உணர்ந்த Creators அந்த நிலையிலிருந்து வந்த
படைப்புகளிருந்து ஒரு வார்த்தை, வரி அல்லது சிறு music notation -ஐ கூட ‌‍‌‍‌அது வெளிவந்த பிறகு மாற்ற உடன்படமாட்டார்கள். (அது முழுமையான ஆக்கம், அதை கூட்டவோ குறைக்கவோ அவர்களால் முடியாது, சரியாக சொன்னால் சாத்தியமில்லை)

To say exactly they cannot move a single piece from that outcome as it will become like an unsolved puzzle. Any addition to it, is of mind created and it will not fit in to the whole, as it will have different shape, that will stand out of the, to be perfectly solved puzzle!

பின்பு மனம் எழுந்து அந்த நிகழ்வுக்கு உரிமை கொண்டாட அதன் வித்தைகளை ஆரம்பிப்பது தனி கதை.  But no doubt these creators are chosen by the almighty to get itself out in many forms to touch our souls!

Wednesday, February 9, 2011

கடவுள் தன்மை!


நாம் ஏன் கடவுள் அல்லது குரு அருளை நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வைத்தே அளவிடுகிறொம்?                       

எதுவும் நடவாவிட்டால் அவரிடமிருந்து நாம் வெகு தூரம் விலகி வந்துவிட்டது போலவும், எதாவது விசேஷமாக ஆக நமக்கு நடந்தால் அவர் அருள் நமக்கு இருப்பதாக கணக்கிடுகிறோம்?
 
நாளடைவில் இதற்கு பலி ஆகி வெறுப்பு அடைகிறோம்.
 
எப்பொழுதும் ஏதாவது எதிர்பார்புடன் வீணே அலையும் நாயை போல?
 
வேண்டாமை என்பது எவ்வளவு பெரிய வரம்?
 
பெறுவதற்கு எதுவும் இல்லை என்றால், யார் வந்து கொடுக்க முடியும்? கடவுள் / குரு உட்பட!
 
இதுவே கடவுள் தன்மையோ?
 
ஆம், கடவுள்தான் யாரிடமும் இறைஞ்சுவதில்லை!

மரண வாக்குமூலம் - வேறு பார்வை


ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும் போது சத்தியப் பிரமாணம் (oath) எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மரண வாக்குமூலம் தருபவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மரணத் தருவாயில் இருக்கும் மனிதன் பொய்யன்றி மெய்யே பேசுவான் என்று சட்டம் நம்புகிறது.  (Tamil wikipedia )

இது ஒருவகையில் ஆன்மிகத்திற்கு மிக அருகில் உள்ளதுபோல் உணர்கிறேன். அடைவதற்கு இனி ஏதும் இல்லை என்னும் நிலையில் ஒருவன் சத்தியத்திற்கு வெகு அருகில் வந்துவிடுகிறான் அல்லது சத்தியமாகவே ஆகிவிடுகிறான்.

இந்த நிலையில் வாழும் வழியைத்தான், மடநெஞ்சே, செத்தாரை போல திரி என்று பட்டினத்தார் பாடினார் போலும்?

மதி - சந்திரன்/ புத்தி

 
நம் முன்னோர்கள் மதி என்ற சொல்லை  அறிவுக்கும் (Intellect), நிலவுக்கும் ஒரே சொல்லாக பயன்படுத்தியிருகிறர்கள்

சொல் பற்றாகுறை காரணமா? பார்ப்போம்,

நிலவுக்குதன்னொளி  (சுயபிரகாசம்இல்லை!
அதுபோல் அறிவுக்கும் சுயபிரகாசம் இல்லை!   

நிலவொளிக்கு ஆதாரம் சூரியன் 
அறிவுக்கு ஆதாரம் ஆன்மா 

நிலவு  ஒளிரும்போழுது சூரியன் தெரிவதில்லை
மனம் ஒளிரும்போழுது ஆன்மா தெரிவதில்லை   

சூரியன் ஒளிரும்போழுது நிலவு தன்னிருப்பை இழக்கிறது
ஆன்மா ஒளிரும்போழுது மனம் தன்னிருப்பை இழக்கிறது 

இருட்டின்றி நிலா இல்லை
அறியாமையின்றி மனம் இல்லை

இதிலிருந்து மனமும் நிலவும் ஒரே இயல்பை கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்

நம் முன்னோர்கள் இதை உணர்ந்தே மதி எனும் சொல்லை பொதுவாக வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

யோசித்து பார்க்கையில், யோசிக்காமல் பார்ப்பது எப்படி? என்ற கேள்வி எழுகிறது ! 

Tuesday, February 8, 2011

THAT / அது

We name something only if it has opposite or alike. 
Example for opposite : Good – Bad, Day – Night 
Example for Alike : Human 
We will not name the sweet as sweet , unless we have tasted bitter or another sweet taste.
Incomparison with opposite or alike.
If bitter or another sweet taste is not there, sweet becomes nameless. 
Names gives individuality, in other words, separation from the whole.
What if, there is something, which is not having opposite or alike? 
If it is incomparable & how come the poor mind, which can only perceive from abstract, can know THAT?
So it is called as THAT/ ATHU/YEGAVASTHU naturally.
 

Sunday, February 6, 2011

ஒரு விற்பனையாளனின் மோசமான பரிவர்தனை!


ஒரு பொருளை விற்பதற்கு,
விலை மதிக்க முடியாத சுதந்திரத்தை, உயர் அதிகாரியிடமும்
போனால் வாராத தன்மானம், மரியாதை, நேரம், முதலியவற்றை
வாங்குவோரிடமும்,

நல்ல கணவன், தகப்பன், சகோதரன், பிள்ளை என்ற கௌரவத்தை குடும்பத்தாரிடமும்,

கலந்துகொள்ள முடியாத கல்யாணம், பண்டிகை, கோயில்பூஜை,
குடும்ப விழா  அனைத்தையும் சுற்றதாரிடமும்,

இழந்துவிட்டு,

பெறும் பணத்தை கொண்டு இந்த பிணம் என்ன செய்யும்?


             
ஒரு விற்பனை கீழாளர் - என்ன மேலாளர் வேண்டிக்கிடக்கிறது?