
ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும் போது சத்தியப் பிரமாணம் (oath) எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மரண வாக்குமூலம் தருபவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மரணத் தருவாயில் இருக்கும் மனிதன் பொய்யன்றி மெய்யே பேசுவான் என்று சட்டம் நம்புகிறது. (Tamil wikipedia )
இது ஒருவகையில் ஆன்மிகத்திற்கு மிக அருகில் உள்ளதுபோல் உணர்கிறேன். அடைவதற்கு இனி ஏதும் இல்லை என்னும் நிலையில் ஒருவன் சத்தியத்திற்கு வெகு அருகில் வந்துவிடுகிறான் அல்லது சத்தியமாகவே ஆகிவிடுகிறான்.
இந்த நிலையில் வாழும் வழியைத்தான், மடநெஞ்சே, செத்தாரை போல திரி என்று பட்டினத்தார் பாடினார் போலும்?
No comments:
Post a Comment