Wednesday, February 9, 2011

கடவுள் தன்மை!


நாம் ஏன் கடவுள் அல்லது குரு அருளை நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை வைத்தே அளவிடுகிறொம்?                       

எதுவும் நடவாவிட்டால் அவரிடமிருந்து நாம் வெகு தூரம் விலகி வந்துவிட்டது போலவும், எதாவது விசேஷமாக ஆக நமக்கு நடந்தால் அவர் அருள் நமக்கு இருப்பதாக கணக்கிடுகிறோம்?
 
நாளடைவில் இதற்கு பலி ஆகி வெறுப்பு அடைகிறோம்.
 
எப்பொழுதும் ஏதாவது எதிர்பார்புடன் வீணே அலையும் நாயை போல?
 
வேண்டாமை என்பது எவ்வளவு பெரிய வரம்?
 
பெறுவதற்கு எதுவும் இல்லை என்றால், யார் வந்து கொடுக்க முடியும்? கடவுள் / குரு உட்பட!
 
இதுவே கடவுள் தன்மையோ?
 
ஆம், கடவுள்தான் யாரிடமும் இறைஞ்சுவதில்லை!

No comments:

Post a Comment