Wednesday, June 24, 2015

ராதாவை மாடு முட்ட, முளைத்த பாடல் !

வேத ஆகமங்கள் கற்றுணந்தோர் விழைந்து நட்போடிணங்கும் 
ராதா எனும் நாமம் படைத்த பக்த சிரோனவன்
சிவகாமியுடனும் அபிதகுஜாம்பாளுடனும் காத்திருந்து 
அவர்தம்மை இறைவனோடு சேர்த்து பள்ளியறை புகவைத்து 
அனுதினமும் அவர்தூங்க பாடினவன் - கால காலமாய் 
இப்பணி செவ்வனே செய்வதால் 
அவனை பாம்பு தீண்ட மாடு எத்த நீர்தூங்கிவீட்டீரோ?
பாரும் ஈசரே! இப்படியே நீர் பாராதிருந்தால் 
அர்த்த ஜாமத்திற்வரும் கூட்டத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் - கவலை வேண்டாம்! 
நீர் தந்த படிப்பினையால் பள்ளியெழுச்சி கூட்ட எண்ணிக்கையில் ஓன்று கூடும் காண்!
ஏதோ வேகத்தில் நின்செயல் வெளிவிட்டேன் யான் 
பாடாய் படுத்திடாதே பாவம் நான் 
உன்னை புகழும் பாடலோன்றும் அறியேன் - பாடலறிந்தவன் 
மாடுஎத்த கிடக்க என் கதி எண்ண கிடுகிடுக்கிறது!

டெல்லி வாழ்வு

அருளிலார்க்கு அவ்வுலகமில்லை!
பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை!
அருளும் பொருளுமில்லாதான் 
தனக்கு டெல்லியே எல்லை!

அருளில்லா காட்டில் யான்!!!

வினையென்னும் சகதியில் வீழ்ந்தழுந்தியே கிடந்த - என்னை 
கருணையால் ஆட்கொண்ட காரணம் அறிகிலேன்! 
அருணையின் அருட்கண்ணில் பட்டேன் 
அதனருகே ஈர்க்க பெற்றேன்! 
நன்றியில்லா நாயினும் கீழோன் யான் 
பின்னுமதனருமை அறியாமற் மதிமயங்கி 
வயிற்றிற்க்கே வாழ்க்கைப்பட்டேன்! 
தலைவனின் உவப்பில்லோர்க்கு தண்ணியில்லா 
காட்டிற்கண் பணிமாற்றம் செய்வதே உலகவழக்கம்! 
அருள்ரமணா நீயும் அதன்வழி போதல் தகுமோ? 
பின் அருளில்லா காட்டிற் யான் கிடக்க காரணம் யாது கூறு?

அருள் ரமணன் கருணையின் உச்சம் அறிவீர்!

ஞானகுருபரன் ரமணன்
கருணையின் உச்சம் அறிகிலாதார்  - அறிய ஓர் அருஞ்செயல் உரைப்பேன் யான் - 

பசுவாம் லக்குமி நற்தவம் புரிந்த பக்குவி 
அதற்கிறங்கி ஞானம் அளித்தது கருணையாமோ?

சிதம்பரப்பிள்ளை, அண்ணாமலை சாமி, ராபர்ட்டு ஆதம்ஸ், மஸ்தான் சாகிபு மற்றும்பல தவசிரேடருக்கு ஞானமருளியதும் கருணையில் சேரா! 

அம்மைக்கு அருளியதும் அதுவே! இது திண்ணம் - 
பின் எச்செயல் கொண்டு அவன் கருணை அளப்பீர் ஜகத்தீரே? 

தீவினையேன் எனை ஆட்கொண்ட நற் காரணம் 
ஏதேனும் ஒன்றுரைக்க அவனை கேட்பீர் 
பாவமவன் பரமன் என்பொருட்டு மௌனமே காப்பான்! 

இத்தீவினையோனை  இன்புற காத்து இந்நாள் வரை வாழ்வதால் அந்நால்வருக்கருளிய மௌனம் மௌனமில்லை 
எம்பொருட்டு அருளியதே உயர் மௌனம் அன்றோ? - செப்பீர்! 
இதுவே அடி முடி காணா அவன் கருணை ! 

தீயோன் சிறப்பு !!!

நான் கவிஞனுமில்லை,நல்ல ரசிகனுமில்லை, 
பக்தனுமில்லை, முக்தனுமில்லை, 
பித்தனுக்கு உகந்தோனில்லை, 
சித்தன் வழி சென்றோனில்லை, 
பார்த்தசாரதி சொல் கேட்டோனில்லை, 
தேவார திருவாசகம் அறிந்தோனில்லை, 
ரிபுகீதை சற்றேனும் கற்றோனில்லை, 
தீயோன் என்னை தனித்தே விட்டால் 
பெருத்த இடர் புரிவன் என்றே, 
அன்பர் பிறப்பை அறுக்கும் மலை 
நல்லோர் பொருட்டு 
எனையும் ஆட்கொண்டததுவே!

Sunday, January 18, 2015

பிரிவேது?

தீயினை விட்டகலா தனல் போல்
நீரினை விட்டகலா குளிர் போல்
காண்பானை விட்டகலா காட்சி போல்
எனை ஒருபோதும் விட்டகலா நீ!!!

புலம்பல்!!!

புழுதியிலே சூழன்றடித்து சடுதியிற் உனைவிட்டகன்ற சருகு நான், 
ஜென்ம ஜென்மாந்திரமாய் மனத்திற்கண் கவனத்தை வைத்து 
சுயத்தை மறந்த மூடன் நான்,  
இருப்பை விட்டகன்று பறத்தின் பிடியிற்சிக்கி தொலைதூரம் வந்துவிட்டேன், 
களைப்புதீர குளிர் நிழலாய் நீ எனக்கு வேண்டாம், 
வந்து வந்து போகும் வசந்தம் போற் உனதருள் எனக்கு வேண்டாம், 
பால் நினைந்தூட்டும் தாயினும் மேலாம் நீ, 
இந்த நாயினும் கீழொனின் கண்ணில் ஏன் பட்டாய்? 
நீயே என் மேலான துன்பமெல்லாம், 
வாட்டியது போதும், 
பேடி நான் உனைத்திறும்ப உற வழியுரைத்தனை 
அது பாத்திரமறியாது நீயிட்ட பிச்சையன்றோ? 
என் தவறில்லை, அனைத்தும் நின் செயலே, 
இனி வருந்தி பலனில்லை, 
என்னால் ஆவதொன்றுமில்லையெனில், நானெதற்க்கு? 
இறைவ! ஒருவனாம் நீ, சடுதியிற் எனை முடித்தே வாழ்க நீடூழி!!!!

சுழல் வாழ்வு


பாழும் உலகிலே பாவி நான் பிறந்து
எண்ஜான் உடம்பே நான் என வளர்ந்து
ஓர் ஜான் வயிற்றுக்கே பிறவியியை தொலைத்து
அல்லல் உறும்போதே தெய்வத்தை நினைத்து
இடர்நீங்கி அற்ப இன்பத்தில் திளைத்து
நன்றி மறந்து நாளும் உழன்று பெறும் விலையன
நெடுந்துயர் விளைந்து
காலன் வரும்பொழுது கணக்கினை பார்த்தால் - அந்தோ!
அங்கேயும் அரியர் வைத்து அடுத்த பிறவிக்கு ஏகினேனே!!!