ஞானகுருபரன் ரமணன்
கருணையின் உச்சம் அறிகிலாதார் - அறிய ஓர் அருஞ்செயல் உரைப்பேன் யான் -
பசுவாம் லக்குமி நற்தவம் புரிந்த பக்குவி
அதற்கிறங்கி ஞானம் அளித்தது கருணையாமோ?
சிதம்பரப்பிள்ளை, அண்ணாமலை சாமி, ராபர்ட்டு ஆதம்ஸ், மஸ்தான் சாகிபு மற்றும்பல தவசிரேடருக்கு ஞானமருளியதும் கருணையில் சேரா!
அம்மைக்கு அருளியதும் அதுவே! இது திண்ணம் -
பின் எச்செயல் கொண்டு அவன் கருணை அளப்பீர் ஜகத்தீரே?
தீவினையேன் எனை ஆட்கொண்ட நற் காரணம்
ஏதேனும் ஒன்றுரைக்க அவனை கேட்பீர்
பாவமவன் பரமன் என்பொருட்டு மௌனமே காப்பான்!
இத்தீவினையோனை இன்புற காத்து இந்நாள் வரை வாழ்வதால் அந்நால்வருக்கருளிய மௌனம் மௌனமில்லை
எம்பொருட்டு அருளியதே உயர் மௌனம் அன்றோ? - செப்பீர்!
இதுவே அடி முடி காணா அவன் கருணை !
No comments:
Post a Comment