நம் முன்னோர்கள் மதி என்ற சொல்லை அறிவுக்கும் (Intellect), நிலவுக்கும் ஒரே சொல்லாக பயன்படுத்தியிருகிறர்கள்,
சொல் பற்றாகுறை காரணமா? பார்ப்போம்,
நிலவுக்கு, தன்னொளி (சுயபிரகாசம்) இல்லை!
அதுபோல் அறிவுக்கும் சுயபிரகாசம் இல்லை!
நிலவொளிக்கு ஆதாரம் சூரியன்
அறிவுக்கு ஆதாரம் ஆன்மா
நிலவு ஒளிரும்போழுது சூரியன் தெரிவதில்லை
மனம் ஒளிரும்போழுது ஆன்மா தெரிவதில்லை
சூரியன் ஒளிரும்போழுது நிலவு தன்னிருப்பை இழக்கிறது
ஆன்மா ஒளிரும்போழுது மனம் தன்னிருப்பை இழக்கிறது
இருட்டின்றி நிலா இல்லை
அறியாமையின்றி மனம் இல்லை
இதிலிருந்து மனமும் நிலவும் ஒரே இயல்பை கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்
நம் முன்னோர்கள் இதை உணர்ந்தே மதி எனும் சொல்லை பொதுவாக வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
யோசித்து பார்க்கையில், யோசிக்காமல் பார்ப்பது எப்படி? என்ற கேள்வி எழுகிறது !
No comments:
Post a Comment